Friday, 14 March 2025

பாவம் அந்தத் தொழிலாளி.....(சிறுகதை)

பாவம் அந்தத் தொழிலாளி.....
(சிறுகதை)

சிகை அலங்கார நிலையம் ஒன்றிற்கு சிகை அலங்காரம்செய்து கொள்ளச் 
சென்றிருந்தேன்.எனக்கு முன்பாக ஒருவர் அலங்காரம் முடிந்து இறங்கினார்.
அலங்கார வேலை செய்தவர்க்கு அறுபது ரூபாய் கூலி கொடுக்கவேண்டுமே.]
பணம் எடுப்பதற்காக வேக வேகமாக அவசரக் கோலத்தில் தன் சட்டைப் பைக்குள்
ஆழம் உள்ளவரை விரல்களை விட்டுத் தேடினார.விரல்களென்ன வித்தையா 
பயின்றுள்ளத இல்லாத ஒன்றை இருப்பதாக்க் காட்டுவதற்கு!

எதுவுமே கிடைக்க வில்லை.விரல்கள் மட்டும் மூச்சுத்திணறிவெளியே பிழைத்து 
வந்தன.அப்பறம் அழகாகச் சொன்னார்.
"ஐய்யய்யோ சட்டையை மாற்றிப்போட்டு வந்து விட்டேனே........
இப்படித்தாங்க அடிக்கடி அவசரத்தில் எதையாவதுஎடுத்துக் கோர்த்துக்கிட்டு
வநதிடுறேன்.வர வர ஞாபக மறதியும் சாஸ்தியாயிருச்சி.எவ்வளவு அசிங்கமாப்
போச்சுபாருங்க.தயவு செய்து தப்பாbநினைக்காதீஙக.இதோஐந்து நிமிடத்தில்
வந்து விடுகிறேன்" என்று அன்று பறந்தவர்தான்
இன்று  வரைக்கும்ம் வரவே இல்லையாம்..ஹூம்.............ஏமாற்றும் வித்தைகளைச்
செய்வதற்குஎப்படியெல்லாம் பிட்டப் போடுறாங்க பாருங்க..

பாவம் அந்தத் தொழிலாளி!"பரவாயில்லங்க வீட்டுக்குப்போய்ட்டு வாங்க"என்று 
கூறி நம்பி வழி அனுப்பி வைத்தவர் இன்னும் எத்தனை நாட்கள்தான்
எதிர் பார்த்துக் கொண்டிருப்பார்!


கொ.பெ.பி.அய்யா.



பாவம் அந்தத் தொழிலாளி.....
(சிறுகதை)

சிகை அலங்கார நிலையம் ஒன்றிற்கு சிகை அலங்காரம்செய்து கொள்ளச் 
சென்றிருந்தேன்.எனக்கு முன்பாக ஒருவர் அலங்காரம் முடிந்து இறங்கினார்.
அலங்கார வேலை செய்தவர்க்கு அறுபது ரூபாய் கூலி கொடுக்கவேண்டுமே.]
பணம் எடுப்பதற்காக வேக வேகமாக அவசரக் கோலத்தில் தன் சட்டைப் பைக்குள்
ஆழம் உள்ளவரை விரல்களை விட்டுத் தேடினார.விரல்களென்ன வித்தையா 
பயின்றுள்ளத இல்லாத ஒன்றை இருப்பதாக்க் காட்டுவதற்கு!

எதுவுமே கிடைக்க வில்லை.விரல்கள் மட்டும் மூச்சுத்திணறிவெளியே பிழைத்து 
வந்தன.அப்பறம் அழகாகச் சொன்னார்.
"ஐய்யய்யோ சட்டையை மாற்றிப்போட்டு வந்து விட்டேனே........
இப்படித்தாங்க அடிக்கடி அவசரத்தில் எதையாவதுஎடுத்துக் கோர்த்துக்கிட்டு
வநதிடுறேன்.வர வர ஞாபக மறதியும் சாஸ்தியாயிருச்சி.எவ்வளவு அசிங்கமாப்
போச்சுபாருங்க.தயவு செய்து தப்பாbநினைக்காதீஙக.இதோஐந்து நிமிடத்தில்
வந்து விடுகிறேன்" என்று அன்று பறந்தவர்தான்
இன்று  வரைக்கும்ம் வரவே இல்லையாம்..ஹூம்.............ஏமாற்றும் வித்தைகளைச்
செய்வதற்குஎப்படியெல்லாம் பிட்டப் போடுறாங்க பாருங்க..

பாவம் அந்தத் தொழிலாளி!"பரவாயில்லங்க வீட்டுக்குப்போய்ட்டு வாங்க"என்று 
கூறி நம்பி வழி அனுப்பி வைத்தவர் இன்னும் எத்தனை நாட்கள்தான்
எதிர் பார்த்துக் கொண்டிருப்பார்!


கொ.பெ.பி.அய்யா.




அடுத்த ரவுண்டு

அடுத்த ரவுண்டு உனக்குத்தான்.

செல்லையா எனும் பெரியவர் ஒருவர்.எல்லா வசதிகளும் வீட்டில் உண்டு..ஆனால்--எதுவுமே கிடையாது அவருக்கு.அது என்ன?என்று கேட்பதற்கு விடு கதை அல்ல இது.  உண்மையைத்தான் சொல்கிறேன்
ஒரே ஒரு பிள்ளைதான் அவருக்குன் உயர்வாகப்படிக்கவைத்தார்உத்யோகமும் கிடைக்க உதவினார்..மற்றெல்லாம் பெண்மக்கள்.ஆண் வாரிசே ஆளட்டும் என்றேஅத்தனை சொத்துக்களையும் அவனுக்கே எழுதி வைத்தார்.
எழுதி வாங்கும் வரை ஏந்தி ஏந்தித் தாங்கினாள் மருமகள்..கைகுள் வந்ததும் கதவைச் சாத்திவிட்டாள்.சாப்பாடு இல்லை- பாவம்சந்திக்கு  வந்துவிட்டார்.ஓய்வூதியம் பெறுவதால் ஓட்டல் சாப்பாடு வருகிறது..அதுவும் இல்லாதவர் கதியென்ன?
மகனும் கண்டு கொள்வத்தில்லை பாவம் அவன் என்ன செய்வான் மனைவிக்கு அடங்கிய மணவாளன்.இவர்களுக்கும் ஒரு மகனிருக்கிறான்இந்தக் காட்சிகளையெல்லாம்-அவன் கூர்ந்து கவனமாகபார்த்துக் கொண்டுதானிருக்கிறான்.
இப்போதுதான் பாட்டி சொன்ன  கதை ஒன்று நினைவுக்குவருகிறது.வயதான மாமியாரை மதிக்காத மருமகள் ஒருத்தி இருந்ததாளாம்..மாமியாரை தொழுவத்திலே போட்டு மண் சட்டியொன்றில் பிச்சைக்காரிக்குப்  போடுவதுபோல் மீந்து போன பழைய கஞ்சியைத்தான்  ஊத்துவாளாம்.பாவம் அந்தக் கிழவியொருநாள் குளிரால்வாடி இறந்தும் போனாளாம்.இதையெல்லாம் கவனித்துக் கொண்டேஇருந்த அவளுடைய பிள்ளை ஓடோடிச் சென்று அந்த ஓட்டைமண்  சட்டியை பத்திரமா ஒளித்து வைத்தானாம் அப்போது அந்த தாய் கேட்டாளாம்.
"இந்த அசிங்கம்  பிடிச்ச சட்டியைத் தூரே  எறியாமல் எதுக்காகப் பத்திரப்படுத்துகிறாய்"என்று.அதற்கு அநதச்  சிறுவன் ---."அடுத்த ரவண்டு உனக்கு வேணுமே அதற்காகத்தான் பத்திரப்படுத்துகிறேன்"என்றானாம்.
இன்று நீ  எதை விதைக்கிறாயோ அதுவே நாளை உனக்கே விளையும்.என்றுமே இளமை உனக்குச் சொந்தமில்லை.நாளை முதுமை உனக்கும்  வரும். 

கொ.பெ.பி.அய்யா.

ஓரே நாள்

ஒரே நாள்!.

ஊருக்குப் பெரியவர்,உத்தம புருசர்,நாட்டாமைஅறக்கட்டளை தர்மகர்த்தா;
அத்தனைக்கும் பொறுப்பானவர்-அனைத்துக்கும் தகுதியானவர்தான.
நல்லவரைக் கண்டாலே வில்லனுக்குப் பிடிக்காதே.ஊரைக் கெடுக்கத்தான்
ஒருவன் இருப்பானே.

எவரும் நல்லவர் என்று பேரெடுத்தாலே அவனுக்கு ஆகாதே.

இவரை எப்படிக் கவிழ்க்கலாம் எனப் பலவாறாகப் பல வருடங்ககளாகவே
யோசித்தான்.

பழக்கமென்றால் பழக்கம்........அப்படி ஒரு பழக்கம். அவன் பேச்சோ!
அப்பப்பா !........................!திருநெல்வேலி அல்வாக்கூட அப்படி இனிக்காது.

இனிக்க இனிக்கப் பேசியே எப்பேர் பெற்றவரையும் கவிழ்த்து விடுவான்.
அப்படி ஒரு கில்லாடித்தனம்.அவனுக்கு.

ஒரு நாள்..............அது சித்திரை மாதம் அக்கினி நட்சத்திர வெய்யில்
நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தது.பாவம் ஊர் நாட்டாமை .........
வெப்பம் தாள முடியாமல் வியர்த்து ஊற்றிட ஆலமர நிழலில் வந்து
அப்பாட ...............ன்னு ஆயாசத்துடன் அமர்ந்தார்.

வந்தான் அந்த சகுனி."அட்டட்டா எப்படி வேரக்கிறது பார்த்தீரா
அப்பப்பா என்ன வெயில்!--இந்தக் குளிர்பானத்தைக் குடியும்.ஆயாசம் நீங்கி தெளிச்சியா ஆயிருவீர்"
எனஅக்கறையோடு வக்கனையாகக் கொடுத்தான் .

அவரும் இவனை நம்பிக் கட கட வென அன்னாக்கஊற்றிக்குடித்து
விட்டுச் சொன்னார்,
"ஆகா இப்படி ஒரு பானத்தை......நான் இதுவரைக் குடிச்சது இல்லையே.
ருசி......... இது ஒரு மாதிரி இருக்கே..........
தூக்கம் வார மாதிரி கண்ண அசத்துதே...........கொஞ்சம் தலையசாச்சுக்கிடட்டுமா?"
எனத் தடு மாறிய குரலில் அவனிடம் அனுமதி கேட்டார்..

அதற்கு அவன்;"அய்யய்யோ உடனே உறங்கக் கூடாது.இதக் கொஞ்சம் சாப்பிட்டுப் பாருங்க,அப்புறம் பாருங்க எப்படி இந்த உலகம் சுதுமுன்னு." 

எனக் கூறிக் கொண்டே வறுத்த கருவாடு ஒன்றை அவர் வாயிலே திணித்தான்.சுத்த சைவமான அவரை இந்தப் பாவி அந்த நிமிடமே அசைவமாக மாற்றிவிட்டான்.அந்த அளவிற்கு அவருடைய புத்தியை எது கெடுத்தது.அவருக்கு எதை ஊற்றிக்கொடுத்து கெடுத்தான்.பாவம்!போதை என்றால் என்னவென்றே அறியாத அவரை குளிர்பானம் என ஏமாற்றி 
சாராயத்தில் கலர் பானம் ஒன்றைக் கலந்து கொடுத்துவிட்டான்.
இப்போது உள்ள நிலையில் அவரைச்சுற்றி என்ன நிகழ்கிறது என்றே 
அவருக்குப் புரியாத அளவிற்கு அவருடைய அறிவு மயங்கி இருந்தது.
அந்தச்சண்டாளன் கட்டளைப்படி இயங்க வேண்டிய கட்டாயத்தில் சிக்கிக் கொண்டார்.சேரக்கூடாதவரோடு சேர்ந்தால் இதுதான் கதி.இதை விதி எனக் கூறி விளக்கம் கூறினால் சமூகம் ஒப்புக்கொள்ளது.

குடி குடியைக் கெடுக்கும் என்பதும் உண்மைதானே!    


"சரி இப்போது வீட்டுக்குப் போகலாமா" எனக் கேட்டு ஒரு சிரிப்பு சிரித்தான்.அந்த சிரிப்புக்கு எத்தனையோ அர்த்தங்கள்.
நீயா இந்த ஊருக்குப் பெரிய மனிதன்.உன்னைப் பார்த்தால் நான் கையெடுத்துக் கும்பிட வேண்டுமா?இப்பப் பாரு ஊரே உன்னைக் கை கொட்டிச்சிரிக்க வைக்கிறேன்"என மனதில் விசத்தை வைத்துக்கொண்டு 
ஒரு பெண்ணை வரவழைத்தான்.அவளும் அவனுடைய ஆள்.அவன்
அழைத்தவுடன் ஈ...எனப் பல்லை இழித்துக் கொண்டு வந்தாள்.
பிறர் மனை நோக்கா பேராண்மைக் காரரான அந்தப் பெரிய மனிதனை 
அரிவிலக்கச்செய்தான்.

என்ன செய்கிறோம் என்று அறியாமல்---- கொஞ்சமும் மனங்கூசாமல்
அவளுடைய தோளில் தொங்கிக் கொண்டுதெருவீதி வழியே இழுபட்ட நடையில் ஊராரெல்லாம் வேடிக்கை பார்க்கும் படிஉளறிக் கொண்டே ஊர் வலம் சென்றார்.

இந்த அற்புதக் காட்சியை ஊரே வேடிக்கையாகவும் வினோதமாகவும்
பாரத்துப் பாரத்துக் கைகொட்டிச் சிரித்தது.

"சீச்சீ இவனா பெரிய மனிதன்...........................இவ்வளவு கேவலமாகப் போனானே............."
என ஒருமையில் திட்டடித் தீர்த்தனர்`

கவுரவம்பதவிவிபட்டம் அவை எல்லாமே ஒரே நாளில்காணாமல் போய்விட்டதே..................குடியினாலே..........................

ஒரு நாள் குடித்தாலென்ன ................. பல நாள் குடித்தாலென்ன!.................
அது முக்கியமே அல்ல..
அவர் தெரிந்து குடித்தாரா..................... தெரியாமல் குடித்தாரா...............!
அதைப்பற்றி யெல்லாம்........ யாரும் ஆராயமாட்டார்கள்...............

எவ்வளவு சிறப்போடு வாழ்ந்தவர் ஒரே நாளில் குடியினால் பாவம்  கெட்டவராகிவிட்டார்..அதனால்.அவர் பெற்ற பதவிகளுக்கும் பட்டங்களுக்கும் உரியதகுதியை அவர் இழந்து விட்டார்.அவ்வளவுதான்.

குடி இப்படியும் ஒரு குடியைக் கெடுத்துவிடும்.
நல்லாரைத் தேர்ந்தே சேரவேண்டும்.

கொ.பெ.பி.அய்யா.